பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வரிசை’ என ஒரு புதுப்பெயர் படைத்துக் கொண்டு வழங்கி வரலாம். அல்லது, சுருக்கமாக ‘அ-ஆ வரிசை’ என்றும் அழைக்கலாம். அதன் சுருக்கமே ‘அகர வரிசை’ என்பது.

எனவே, அணிலாடு வரிசை முறையில் சொற்கள் அடுக்கப்பட்டுப் பொருளும் கூறப்பட்டிருக்கும் சுவடி அகராதி என அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘டிக்ஷனரி’ (Dictionary) என்கின்றனர்.

அகராதிக் கலை என்றால் என்ன?

சொல்லுக்குப் பொருள் கூறத் தொடங்கிய அகராதி நாளடைவில் பல துறைகளாகப் பிரிந்து பல உருவங்கள் எடுத்தது. அவற்றுட் சில வருமாறு:

(1) சொல்லுக்குப் பொருள் கூறுவதோடு, அச்சொல் எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாயிற்று என்ற விவரமும், அது பேச்சு வழக்கிலோ அல்லது செய்யுள் வழக்கிலோ வந்துள்ள தொடரும். அது எடுத்தாளப்பட்டுள்ள நூலின் பெயரும், நூலில் அது வந்துள்ள உட்பிரிவின் பெயரும், இத்தனையாவது பாடல் எனப் பாடல் எண்ணும் இன்ன பிறவும் கொடுக்கப்பட்டிருக்கும் அகராதிகள்.

(2) மின்சாரம், பொறிகள் (இயந்திரங்கள்) என்பன போன்ற குறிப்பிட்ட பொருள்களைப் பற்றியும், உழவு, நெசவு போன்ற குறிப்பிட்ட தொழில்களைப் பற்றியும் உள்ள சொற்கள் மட்டும் அவற்றின் தோற்றத்துடன் பொருள் கூறப்பட்டிருக்கும் தனித்துறையகராதிகள்.

(3) சரியான இலக்கிய வழக்கிலிருந்தும் பொருத்தமான ஒலியிலிருந்தும் (உச்சரிப்பிலிருந்தும்) வேறு-