பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/191

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

187



பண்டைக் காலத்தில் தமிழகத்தில் கணிதம் எவ்வளவு வளர்ச்சியுற்றிருந்தது என்பதனை

“நூலே, எண்ணும், பனுவலும் ஆகும்".

என்னும் நூற்பாவால் அறியலாம். நூல் என்றால், எண் எனப்படும் கணிதக் கலை நினைவுக்கு வருமளவுக்கு அன்று கணிதக் கலை தமிழில் வளர்ந்திருந்தது. ஆனால் இன்று...? எல்லாவற்றையும் இழந்து, தமிழில் ஒன்றும் இல்லை என்ற குறைச் சொல்லைக் காதால் கேட்டுப் பிறர் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

‘மா’ என்னும் ஓரெழுத்து மொழிக்கு ஆறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன:

“மாவே, பெருமையும், கருமையும், சூதமும்,
மேவிய நாற்கால் உடையவும், வண்டும்,
பூவுறை திரு என ஆறையும் பொருந்தும்.”

[சூதம்=மாமரம்; நாற்கால் உடைய=விலங்குகள்; பூஉறை திரு=தாமரைப் பூவில் வதியும் திருமகள்]

அரி என்னும் சொல்லுக்கு உரிய இருபத்து மூன்று பொருள்களும் அறியத்தக்கன:

“கண், வரி, கடல், பொன், கிண்கிணிப் பெய் பால்,
பொன்னிறம், குதிரை, தவளை, குரங்கு,
பகை, வாள், சயனம், வலி, வண்டு, வெம்புகை,
எனப் பதினைந்தும் அரியெனப் புகல்ப,
சிங்கம், திருமால், திகிரி, இரவி,
இந்திரன், காற்றே, யமனே, அங்கி, என்று
அங்கண் வடமொழிச் சிதைவின் அரியாகும்.”

என்பது நூற்பா. அரி என்னும் சொல் தற்செயலாகத் தமிழ் மொழியிலும் உள்ளது; சிறு ஒலி வேறுபாட்-

12