பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/196

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

192



என்பது நூற்பா. மறத்துறையில்மட்டும் வெற்றி நோக்குடன் வெறிகொண்டலையும் மக்கட் கூட்டம், அதனை விடுத்து அறத்துறையில் கண் திருப்புமாயின், உலகில் போட்டி பொறாமை போர் பகை முதலிய தீமைகள் விலகி, உயர்வு ஒற்றுமை ஒப்புரவு முதலிய நன்மைகள் பெருகி இவ்வுலகம் இன்பவுலகமாக மாறிவிடும் அன்றோ?

இந்தப் பதினோராம் தொகுதியில் இரண்டு இடங்களில் தமிழ் முழக்கம் கேட்கிறது. ஆசிரியர் திவாகரர் தமது தாய் மொழியாகிய தமிழ் மொழியைக் ‘கன்னித் தமிழ்’ என்றும், ‘வாழித் தமிழ்’ என்றும் புகழ்ந்து மகிழ்வெய்துகிறார் கம்பலை, மடங்கல் என்னும் இரு சொற்களையும் தமிழர் இன்னின்ன பொருள்களில் வழங்குவர் என்று கூறுமுகத்தான் தமிழைச் சிறப்பித்து ஆசிரியர் சிறப்பெய்துகிறார்:

“இன்னாங் கோசை, நடுக்கம், அச்சம்,
கன்னித் தமிழோர் கம்பலை என்ப.”

“ஊழித்தீ, சிங்கம், உகமுடிவு, இடியென,
வாழித் தமிழோர் மடங்கல் என்ப.
கொடுங் கூற்றின் பெயரும், நோயும், கூறும்”

என்பன பாச்கள். இன்று தமிழின் பெருமையைப் பேசுவோருக்கு ஒருசிலரால் என்னென்னவோ ‘பட்டங்கள்’ கட்டப்படுகின்றன. திவாகர முனிவரோ, எட்டாம் நூற்றாண்டிலேயே, என்றும் குலையாத இளைய கன்னிமொழி தமிழ் என்றும், என்றும் அழியாது வாழும் மொழி தமிழ் என்றும் கூறித் தம் மொழியுணர்வை மொழிப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார். உண்மை-