பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


(9) உலகச் செய்திகள் - பொருள்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ள கலைக்களஞ்சியம் (Encyclopaedia).

(10) ஒரு மொழிச் சொல்லுக்கு நேரான வேறு ஒரு மொழிச் சொல்லோ-அல்லது-பல மொழிச் சொற்களோ கொடுக்கப்படும் மொழியகராதி வகைகள்.

(11) மேலுள்ளவையே யன்றி, ஒரு மொழியிலே வழங்கும் பழமொழிகளை யெல்லாம் அகர வரிசையில் தொகுத்த பழமொழி யகராதி.

(12) ஒரு மொழி வல்ல: புலவர்களின் (அறிஞர்களின்) வாழ்க்கைக் குறிப்புக்களை அகர வரிசையில் தரும் புலவர் அகராதி.

(13) இருசுடர், முக்குணம், ஐம்பொறி எனத் தொகையெண்களால் சுட்டப்படுவனவற்றை விளக்கும் தொகை யகராதி.

(14) அகம், மகம், முகம்; இன்னல், கன்னல், தின்னல்-என்பன போன்ற செய்யுட் கேற்ற எதுகைத் தொடைச் சொற்கள் தரப்படும் தொடையகராதி.

(15) அரம்–அறம்; குலம்–குளம்; மணம்–மனம் என்பன போல ஒப்புமையுடைய ஓரெழுத்து வேறுபாடுடைய சொற்கள் தரப்பட்டுள்ள எழுத்து வேறு பாட்டகராதி.

இப்படி யின்னும் பலவகை அகராதிகள் உருவெடுத்து வளர்ந்து வருகின்றன.

முதலில் சொற்கட்குப் பொருள் கூறுதல் மட்டும் செய்து வந்த அகராதி, மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி