பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

209

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் பிங்கலரது வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ளவும் வழக்கம்போல் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. 1917-ஆம் ஆண்டில் "மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை'யில் வெளியான பிங்கல நிகண்டுநூல் பதிப்பின் முகவுரையில் பின் வருமாறு ஒரு பகுதி காணப்படுகிறது :

" பிங்கல நிகண்டு என்பது பிங்கல முனிவர் என்னும் வித்வ சிரேஷ்டரால் இயற்றப்பட்ட நூல். இவர் ஆதிதிவா கரம் இயற்றிய திவாகர முனிவர் புத்திரர். இப்பிங்கல முனிவர் சோழ வம்சத்தில் உதித்தவரே யாயினும், துறவு பூண்டு தமிழ், நூல் ஆராய்ச்சியிலேயே தமது காலத்தைப் போக்கியவர். இவர் காலம் நச்சினர்க்கினியர் காலத்துக்கு முந்திய தென்பர்.”

இது, நூலை அச்சிட்டவர்கள் எழுதிய முகவுரை யாகும். .

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியரா யிருந்த ஆ. சிங்கார முதலியார் இயற்றிய அபிதான சிந்தாமணி என்னும் நூலின் இரண்டாம் பதிப்பில் (1934-ஆம் ஆண்டு), பிங்கல முனிவரைப் பற்றிப் பின் வருமாறு காணக்கிடக்கிறது :

" பிங்கல முனிவர் :-பிங்கலந்தை என்னும் நிகண்டு இயற்றிய சைநர். இந் நிகண்டு, சூடாமணி நிகண்டு, சேந் தன் திவாகரம் முதலியவற்றிற்கு முந்திய நூலாதலால், இவர் அந்நூலாசிரியர்களுக்கு முந்தியவர். இவர் ஆதி திவாகர முனிவர்க்குப் புத்திரர்.” r

மேலுள்ள இரு குறிப்புக்களையும் நோக்கின் பிங்கலர் ஆதி திவாகரரின் மகனுவார் என்பதும், பிங்கல நிகண்டு சேக்தின் திவாகர நிகண்டினும் காலத்