பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

213

ஒருசொல் பல்பொருளி ைேடும்,

உரைத்தபல் பெயர்க் கூட்டந்தான், வருமுறை திவாகரம் போல்...... $ 2

என மண்டல புருடர் எழுதியிருக்கும் பாடலை மீண்டும் ஒருமுறை ஈண்டு நினைவு செய்து பார்த்தால், திவாகரம் என அவரால் சுட்டப்பட்டிருப்பது சேந்தன் திவாக ரமே என்னும் உண்மை மலைமேல் விளக்காகும்.

(2) இவ்வுண்மையை விளக்க மற்றும் ஒரு சான்று உண்டு. பதினேழாம் நூற்ருண்டில் ஆசிரிய நிகண்டு என்னும் நூல் இயற்றிய ஆண்டிப் புலவர் தமது முன்னுரைப் பாயிரத்தில்,

‘’ முந்துள திவாகரம் பிங்கல நிகண்டுசீர்

முந்து காங்கயன் உரிச் சொல் முறைபெறு கயாகரம் பகரும் அகராதியிவை

முற்றும் ஒன்ருய்த் திரட்டி...... 3 *

எனப் பிங்கலத்தினும் திவாகரத்திற்கே முதன்மை தந்துள்ளார். இதலுைம் திவாகரமே முற்பட்டது என்பது உறுதி.

உண்மை இஃதாயின், பவணந்தியாரும், அகராதி நிகண்டு எழுதிய புலியூர்ச் சிதம்பரரேவண சித்தரும் பிங்கலத்திற்கே முதன்மை கொடுத்திருப்பது ஏன் ? என்ற வி ைஈண்டு எழலாம். இந்த ஐய வினவிற்குத் தெளிவாகத் தக்க விடையிறுக்க முடியும் :

i . - .

பவணந்தியார் தமது கன்னூலில் பிங்கலத்திற்கு

முதன்மை கொடுத்திருக்கும் சூழ்நிலையை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர் நன்னூல் உரியியலில்,