பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

214

பலபொருள் (அர்த்தம்) உடைய ஒரு சொல்லும், ஒரு பொருள் உடைய பல சொற்களுமாகச் சில சொற் களைக் கூறி, இப்படியே சொல்லிக்கொண்டு போனல் இந்நூல் விரியும் ஆதலால், ஏனைய சொற்களைப் பற்றி யெல்லாம் விரிவாக அறியவேண்டுமாயின், பிங்கலம் முதலிய நூல்களில் கண்டுகொள்க என்னும் கருத் தில், .

“ இன்னது இன்னுழி இன்னணம் இயலும்

என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே.”

என்று எழுதியுள்ளார். கன்னுாலார் இப்படிக் கூறியிருப்பதில் பொருள் உண்டு. திவாகரம், பிங் கலம் என்னும் இரண்டனுள், திவாகரத்தினும் பிங்க லத்திலேயே மிக்க சொற்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது, திவாகரத்தில் ஏறக்குறைய 9500 சொற் களே விளக்கம் பெற்றுள்ளன; பிங்கலத்திலோ ஏறக் குறைய 15,800 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட பிங்கலத்தின் ஐந்தில் மூன்று பாகமே திவாகரம். இதல்ைதான் பவணந்தியார், சொற்களை விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானல் பிங்கலம் முதலிய நூற்களில் காண்க என, மிக்க சொற்கள் இடம் பெற்றுள்ள பிங்கலத்தை முதலில் குறித்தார்.

தந்தை திவாகரர் சுருக்கமாய் எழுதியிருக்க, அவர் விட்டனவற்றையும் சேர்த்து மைந்தர் பிங்கலர் விரிவாக எழுதியிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. 'தாய் பத்தடி தாண்டும் என்ருல், குட்டி பதினறடி தாண்டும் என்று பழமொழி சொல்வார்களே !