பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

216

- எது பிந்தியது என்று சொல்ல முடியாத அள வுக்குப் பிற்காலத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்க வேண் டும். இந்த இரு நூற்களுக்கும் நடுவே குறைந்தது ஒரு நூற்ருண்டுக் காலமாயினும் இடைவெளி யிருக் திருக்குமாயின், இரு வேறுபட்ட இந்தக் குழப்பத்திற்கு இடம் இருந்திராது; இதுதான் முன்னது - இதுதான் பின்னது என்ற திட்டவட்டமான முடிவு எல்லோரா லும் தொடர்ந்து ஒருமித்துக் கூறப்பட்டு வந்திருக்கும்.

இவ்வாறு சில பொருட்டுக்களால் சிலர் பிங்கலத் திற்கு முதன்மை கொடுத்திருப்பினும், திவாகரத்தின் தலைமை இறுதிவரை - இன்றுவரை மறையவில்லை. சூடாமணி நிகண்டின் பதினேராம் தொகுதியைப் பத்தொன்பதாம் நூற்ருண்டில் (1836) அச்சிட்ட புதுவை-நயகப்ப முதலியார் தமது பதிப்பு முகவுரை .யில்,

' கையெழுத்துப் புத்தகங்களி லெழுத்துஞ் சொல்லும் மாறுபடுகின்றனவற்றை விலக்கிச் சுத்தபாடமாக வழங்குவிக் கும் பொருட்டுத் திவாகரம் - பிங்கலம்-உரிச் சொன்னிகண்டுஅரும் பொருள் விளக்கத் தீபிகை-ஆசிரிய நிகண்டு-கயாகரம்பொதிய நிகண்டு-சூத்திர வகராதி-இவை முதலிய நூல்களா

னும்-'

என்று திவாகரத்திற்கே முதன்மை கொடுத்துள்ளார். பிங்கலத்திற்கு முதன்மை கொடுத்துள்ள இருபதாம் நூற்ருண்டினர்களாகிய பிங்கல நிகண்டுப் பதிப் பாசிரியரும் அபிதான சிந்தாமணி ஆசியருங்கூட, பிங் கலர் திவாகரரின் மகன் என்பதை ஒத்துக் கொள்கின் றனர். ஆனல் அவர்கள், திவாகரன் பயந்த பிங்கல முனிவன்' என்னும் பாடற் பகுதியிலுள்ள திவாகரன்