பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

220

எழுதப்பட்டவையல்ல. இவை யிரண்டும், பிற்காலத் தில் ஏடு பெயர்த்து எழுதியோரால் இயற்றிச் சேர்க்கப் பட்டிருக்கவேண்டும். ஓர் ஒலையிலிருந்து மற்றேர் ஒலையில் பெயர்த்து எழுதுபவர்களும், ஓலைச் சுவடியி லிருந்து தாளில் அச்சிடுபவரும் இவ்வாறு கடவுள் வணக்கமும், ஆசிரியரின் சிறப்பைக் கூறும் பாயிரமும் (அணிக்துரையும்) எழுதிச் சேர்ப்பது தொன்று தொட்ட மரபு. -

இப்பாடல்கள் இரண்டும் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்தவையல்ல என்ருலும், ஆசிரியர் காலத்திலேயே ஒரு சிறந்த புலவர் எழுதியளித்த அணிந்துரை (மதிப் புரை)யாகவும் இருக்கலாம். இக்காலத்தும் ஓர் எழுத் தாளர் எழுதிய நூலுக்கு அறிஞர் சிலர் மதிப்புரை - சிறப்புரை அளிக்கும் மரபு உண்டல்லவா ?

இவ்விரண்டு பாடல்களும் பிங்கல முனிவரே எழுதிய தற்சிறப்புப் பாயிரமாகும் - அதாவது இக் காலத்தில் நூலாசிரியர் நூலின் முகப்பில் எழுதுகிற ஆசிரியர் முன்னுரை (Preface) போன்றனவாகும் என்று சிலர் கூறலாம். இக்கூற்று பொருந்தாது. சிறப்புப் பாயிரப் பாடலின் இடையிலுள்ள பிங்கல் முனிவன் எனத்தன் பெயர் நிறீஇ' என்னும் அடிய்ைக் 'கூர்ந்துகோக்கின், பிறர்எழுதியதே என்பதுபுலப்படும். பிங்கல் முனிவரே எழுதியிருப்பின், தன் பெயர் எனக் கூருது என் பெயர்’ என்று கூறியிருப்பார்; அதாவது, i. பிங்கல முனிவன் என என் பெயர் கிறீஇ என்று எழுதியிருப்பார். எனவே, இச்சிறப்புப் பாயிரப் பாடல் பிறர் எழுதியதே என்பது தெளிவு. இப்பாடலுக்கு முன்னல் பிள்ளையார் வணக்கப் பாடல் இருப்பதால்