பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

221

அஃதும் சிறப்புப் பாயிரம் எழுதியவர் எழுதியதே: சிறப்புப் பாயிரத்திற்குப் பின்னல் பிள்ளையார் வணக் கப் பாடல் இருந்திருப்பின், அதனைப் பிங்கலர் எழுதிய காப்புப் பாடலாகக் கருதமுடியும். அவ்வாறு இல்லை பaதலின், இரண்டுமே பிறர் எழுதிய பாடல்களே.

வகைகள்

பிங்கலம் பத்து வகைகளாக அமைக்கப்பட்டுள் ளது. திவாகரத்தின் ஒவ்வொரு பிரிவும் தொகுதி' என அழைக்கப்படுதல் போல, பிங்கலத்தின் ஒவ்வொரு பிரிவும் வகை என அழைக்கப்பட்டுள்ளது. அதன் பத்து வகைகள் வருமாறு :

முதலாவது - வான்வகை இரண்டாவது - வானவர் வகை மூன்ருவது- ஐயர் வகை கான்காவது - அவனி வகை ஐக்தாவது - ஆடவர் வகை ஆருவது - அதுபோக வகை ஏழாவது-பண்பிற் செயலின் பகுதிவகை எட்டாவ்து-மாப் பெயர் வகை ஒன்பதாவது-மரப் பெயர் வகை

பத்தாவது-ஒரு சொல் பல்பொருள் வகை

இந்தப் பத்து வகைகளுள் முதல் ஒன்பது வகை களும் ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி என்னும் முதல் இனத்தைச் சேர்ந்தனவாம்; அதாவது, ஒரே பொருளுக்கு உரிய பல பெயர்களையும் கூறுவனவாம். இறுதியான பத்தாவது வகையோ ஒரு சொல் பல்