பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

223

திவாகரா தெய்வப் பெயர்த் தொகுதியிலும் மக்கள் பெயர்த் தொகுதியிலும் அடக்கிவிட்டார்.

(4) அவனி வகை:-இது இடங்களைப் பற்றி யது. திவாகரத்தின் இடப் ப்ெயர்த் தொகுதியைப் போன்றதே இது, .

(5) ஆடவர் வகை:-இது, திவாகரத்தின் மக்கள் பெயர்த தொகுதியைப் போன்றது.

(6) அதுபோக வகை :- இது, வாழ்க்கையில் அநுபவிக்கிற - துய்க்கிற பொருள் வகைகளைப் பற்றி யுது. இப்பகுதி பின்வரும் இருபது உள்:தலைப்புக் களின் கீழ் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது :- .

1. உணவின் வகை 11. மண்டில வகை 2. பூணின் வகை 12. படை வகை 3. இரத்தின வகை 13. காலாள் வகை 4. உலோக வகை 14. தோல் கருவி வகை 5. ஆடை வகை 15. குடை வகை 6. பூச்சு வகை 16. ஆயுத வகை 7. சூட்டு வகை 17. செயற்கை வகை 8. இயல் வகை 18. அக்குரோணி வகை 9. இசை வகை 19. வெள்ள வகை 10. நாடக வகை 20. இல்லணி வகை

மேலுள்ளவாறு பிங்கலத்தில் அதுபோக வகை என்னும் தொகுதியில் கூறப்பட்டுள்ளனவற்றை, திவாகரர் பல்பொருள் பெயர்த் தொகுதி, செயற்தை வடிவப்பெயர்த் தொகுதி என்னும் இரண்டு தொகுதி களில் அமைத்துள்ளார். -