பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

224

7) பண்பின் செயலில் பகுதிவகை:-இது, திவா ரைத்தில் உள்ள பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி என்னும் இரண்டு தொகுதிகளையும் போன்றது.

(8) மாப் பெயர் வகை:- இது, திவாகரத்தின் விலங்கின் பெயர்த் தொகுதியைப் போன்றது.

(9) மரப் பெயர் வகை :- இது, திவாகரத்தின் மரப் பெயர்த் தொகுதி போன்றது.

(10) ஒரு சொல் பல்பொருள் வகை :-இது, திவாக ரத்தின் பதினேராவது தொகுதியாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதியைப் போன்றது.

நூற்பா

பிங்கல நிகண்டு திவாகரம் போலவே நூற்பாவால் (சூத்திர நடையால்) ஆனது. இந்நூலில் மொத்தம் 4121 நூற்பாக்கள் உள்ளன. ஏறக்குறைய 15,800 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன.

முறை மாற்றம்

பிங்கலத்தில் உள்ள ஒரு சொல் பல்பொருள் வகை’ என்னும் பத்தாம் பகுதிதான், இக்காலத்தில் உள்ள அகராதிகளைப்போல், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் கூறுகிறது. இப்பகுதியில் 1091 சொற்களுக்கு உரிய பொருள்கள் தரப்பட்டுள் ளன. பிங்கலர் இந்த 109| சொற்களையும் அகராதி முறையில் அடுக்கிக் கூருமல், தம் உள்ளம் போன போக்கில் முன்னும் பின்னுமாக வைத்திருந்தார். ஒரு