பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

(மூவறி வுயிர்)

" உற்றறி புலன், நா, மூக்கும் உடைமையின் முற்பெறு சிதல் எறும்பு இணைய மூவறிவே."

(காலறி வுயிர்)

" உற்றறி புலன், நா, மூக்கொடு, கண்ணும் பெற்ற வண்டும் ஞெண்டும் நாலறிவே."

(ஐயறி வுயிர்) " உற்றறி புலன், நா, மூக்கொடு, கண், செவி

மக்களும் மாவும் ஐந்தறிவினவே.”

(ஆறறி வுயிர்) " மனத்தோடு ஆறறி வினரே மக்கள் ஒருசார் விலங்கும் அதுபெறற் குரித்தே.”

மேல் உள்ள ஆறு நூற்பாக்களும் திவாகரத்தில் உள்ளவை. இனி இதே கருத்துக்களைக் கூறும் பிங்கல நூற்பாக்களைக் காண் பாம் :- -

(ஓரறி வுயிர்) " உற்றறி புலனது ஒன்றே உடைமையின் மற்றைப் புல்லும் மானும் ஒாறிவே."


(ஈரறி வுயிர்)

"உற்றறி புலனும், நாவும் உடைமையின் அட்டையும் நந்தும் போல்வ ஈசறிவே.”

(மூவறி வுயிர்)

" உற்றறி புலன், நா, மூக்கும் உடைமையின் முற்பெறு சிதல் எறும்பு ஆதி மூவறிவே.”