பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

233

மேலும், சென்னே அரசின் கீழைக்கலே ஓலைச் சுவடி நிலையத்தில், ஆசிரியர்பெயரும் நூலின் பெயரும் தெரியாத ஏதோ ஒரு கிகண்டின் ஆறு தொகுதிகள் மட்டும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அக் கிகண்டின் முதல் தொகுதி இல்லையாம். முதல் தொகுதி இருக்திருந்தால் பெயர் தெரிந்திருக்குமே! அத்தொகுதி எப்படியோ கைநழுவி விட்டிருக்கிறது. இரண்டாம் தொகுதியிலிருந்து ஆறு தொகுதிகள் உள்ளனவாம், இறுதித் தொகுதிகளும் காணப்படவில்லையாம். இக் காலத்தில் புத்தகங்களின் முன் தாள்கள் சிலவும் பின் தாள்கள் சிலவும் கிழிந்து அகன்று விடுவதுபோல அக்காலத்தும் ஒலைச்சுவடி நூற்களின் முற்பகுதியும் பிற்பகுதியும் கெட்டுவிட்டிருக்கும் அல்லவா ? பதிற் |றுப் பத்து என்னும் சங்க இலக்கியத்தின் முதல் பத்தும் இறுதிப்பத்தும் இப்படித்தானே இழக்கப்பட்டு விட்டன. இந்த நிலை.மேற்குறிப்பிட்ட நிகண்டிற்கும் ஏற்பட்டிருக்கிறது . இங்கிகண்டு நூற்பா(சூத்திர)

கடையில் உள்ள தாம். -

இவ்வாறு பல நிகண்டுகள் ஏற்பட்டும், அவை கன்கு போற்றிக் காக்கப்படாமையால் ஊர் பேர் தெரியாதபடி அழிந்து போயின. எனவே, இப்பெயர் தெரியா நிகண்டுகள், திவாகரம் பிங்கலம் ஆகியவற் :றின் காலத்துக்கும் சூடாமணி நிகண்டின் காலத்துக் கும் கடுவிலுள்ள இடைவெளிக் காலத்தில் தோன்றி .யிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறு கின்றனர். ஆனல், இப்பெயர் தெரியா நிகண்டுகள் அனைத்துமே திவாகரத்திற்கும் சூடாமணிக்கும் இடையில்தான் தோன்றின என்று அறுதியிட்டுக் கூற முடியாது; இன்னே ரன்னவற்றுள் சில, ஆதி