பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

235

நூற்றுக் கணக்கானவை எனக் கருமித்தனமாகக்

கணக்குப் போடாமல், ஆயிரக் கணக்கானவை-அது

வும் பல்லாயிரக் கணக்கானவை எனப் பரந்த அளவில்

தாராளக் கணக்குப் போட்டுள்ளார். அந்தப் பாடல்

வருமாறு :

" பல்லா யிரநிகண்டில் பண்டிதர்கள் சொன்னபொருள்

எல்லாம் எளிதாய் இனிதுணரக்-கல்லிடையூர் மன்னுசிவ சுப்ா மணியன் கவிராசன் பன்னுதமிழ் நாம தீபம்."

இப்பாடலிலிருந்து, மறைந்துபோன நிகண்டு களின் அளவை உய்த்துணரலாம். கிடைத்திருக்கும் நிகண்டுகளில் ஏதேனும் ஒன்றையாயினும் எவரும் கல்லாத இந்த இருபதாம்நூற்ருண்டில்-கிடைத்திருக் கும் நிகண்டுகளின் பெயர்களைக்கூடப் பெரும்பாலான கல்விமான்கள் அறிந்திராத இந்த இருபதாம் நூற். ருண்டில்-நிகண்டுகள் என ஒருசார் கலைநூற்கள் உள்ளன என்பதையே மாபெருங் கல்வி வல்லுநர் களுள் பெரும்பாலோர் தெரிந்திராத இரங்கத்தக்க இந்த இருபதாம் நூற்ருண்டில், கிடைக்காமல் மறைந்துபோன நிகண்டுகளைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிருர்கள் ? அந்தோ காலமே !

15