பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

நனனுால

திவாகரம், பிங்கலம் ஆகியவற்றிற்கும் சூடாமணி நிகண்டிற்கும் இடையில், நிகண்டு மாதிரியான ஓர் அமைப்பைத் தன்னகத்தே ஒர் உறுப்பாகக் கொண்ட ‘நன்னூல் என்னும் ஒரு நூல் எழுந்தது. நல்ல நூல்நன்மை தரும் நூல் ஆனது பற்றி இது நன்னூல் எனப் பெயரிடப்பட்டது. தொல்காப்பியம் போலவே இஃதும் ஒரு மொழியிலக்கண நூலாம்.

ஆசிரியர் வரலாறு

கன்னூலின் ஆசிரியர் பவணந்தியார் என்பவர். இவர் ஒரு சைனசமயத் துறவி. நூலின் தொடக்கத் தில்

“ பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த

நான்முகற் ருெழுது நன்கியம்புவன் எழுத்தே.”

என அசோக நிழலில் அமர்ந்த அருகக் கடவுளை வழி பட்டிருத்தலின் சைனர் என்பது தெளிவு. இவர் சனகை என்றழைக்கப்படும் சனகாபுரம் என்னும் ஊரில் வாழ்ந்த சன்மதி என்னும் முனிவரின் மாணுக்கராவார். அதல்ை இருவரும் அதே ஊரினர் எனக்கொள்ளலாம். இவர் தொண்டை மண்டலத்தில் உள்ள சனகாபுரம் என்னும் ஊரினர் என்று தொண்டை மண்டல சதகம் என்னும் நூலும், கொங்கு மண்டலத்திலுள்ள சனகா புரம் என்னும் ஊரினர் என்று கொங்கு மண்டல சதகமும் கூறுகின்றன. இவற்றுள் எது உண் மையோ ? சீயகங்கன் என்னும் சிற்றரசனல் இவர்