பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

239

நூலின் முதற் பகுதியாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய் யிற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் ஐந்து இயல்கள் உள்ளன. இரண்டாவதாகிய சொல்லதி காரத்தில் பெயரியல், வினையியல், பொதுவியல், இடை யியல், உரியியல் என ஐந்து இயல்கள் உள்ளன. பொதுவாகச் சொல்லதிகாரத்தில், சிறப்பாக இடை யியல்-உரியியல்களில்தான் சொற்பொருள் பற்றிய நிகண்டுக் கூறு அமைந்து கிடக்கிறது. அது வருமாறு :

நிகண்டுப் பகுதி

இடையியலில் -ஏ, ஓ, என, என்று, உம், என்ரு, எனு, ஒடு, தில், மன், மற்று, கொல், தெய்ய, அந்தில், ஆங்கு அம்ம, மா, மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள', ஈ, யாழ, யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், தான், கின்று, கின்று முதலிய இடைச் சொற்கட்கு உரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட் டாக, ஏ, ஓ என்னும் இடைச் சொற்களின் பொருள் களைக் காண்பாம் :

(ஏகார இடைச்சொல்) ' பிரிநிலை விஎைண் ஈற்றசை தேற்றம்

இசைநிறை எனஆறு ஏகாரம்மே.”

(ஓகார இடைச் சொல்) ': ஒழியிசை விச்ைசிறப்பு எதிர்மறை தெரிநிலை கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஒவே.”