பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

240

என்பன கன்னூற் பாக்கள். அதாவது - ஏ என்னும் சொல் பிரிநிலை, வினு, எண், ஈற்றசை, தேற்றம், இசை கிறை என ஆறுபொருள்கள் உடையதாம், ஒ என்னும் சொல் ஒழியிசை, வினு, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிப்பு என எட்டுப் பொருள்கள் உடையதாம். இவ்வாறே மற்ற சொற்களின் பொருள்களையும் நன்னூலில் காண்க. இந்த இடை யியல், திவாகரத்திலுள்ள ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதியைப் போன்ற அமைப்புடையதாகும்

அடுத்த உரியியலில், திவாகரத்தில் உள்ளாங்கு, ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி, ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி, பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்று வகைக் கூறு களும் சுருங்கிய அளவில் உள்ளன.

உரியியலின் தொடக்கத்தில் ஓரறிவுயிர், ஈரறி வுயிர், மூவறிவுயிர், காலறிவுயிர், ஐயறிவுயிர் ஆகியவை இன்னின்னவை என விளக்கப்பட்டுள்ளன

“ புல்மரம் முதல உற்றறியும் ஒரறிவுயிர்.” ! முரள் நந்து ஆதி நாவறிவோடு ஈரறிவுயிர்.”

" சிதல் எறும்புஆதி மூக்கறிவின் மூவறிவுயிர்.” " தும்பி வண்டு ஆதி க்ண்ணறிவின் நாலறிவுயிர்.” ' வானவர் மக்கள் நாகர் விலங்கு புள்

ஆதி செவி யறிவோடு ஐயறிவுயிரே.”

என்பன நூற்பாக்கள். ஆருவது அறிவைப் பற்றிப் பவணந்தியார் ஒன்றுமே கூறவில்லை. இந்தப் பகுதி திவாகரத்தில் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.