பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

241

- மேற்கொண்டு உரியியலில் ஒரே பொருளைக் குறிக் கும் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. மிகல் என்னும் ஒரு பொருளைக் குறிக்க ஆறு பெயர்கள் உள்ளன வாம் :

“ சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகல்.”

என்பது நூற்பா. அடுத்து, சொல் என்னும் ஒரு பொரு ளைக் குறிக்கப் பதினறு பெயர்கள் உள்ளனவாம்:

' மாற்றம், துவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை,

கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல், சொல்லே.'

என்பது நூற்பா. அடுத்து, ஓசை என்னும் ஒரு பொரு ளைக் குறிக்க இருபத்திரண்டு பெயர்கள் உள்ளன வாம் :

  • முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை,

இரக்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குாை, கனை, சிலை, சும்மை, கெளவை, கம்பலை, அரவம், ஆர்ப்போடு இன்னன ஒசை.”

என்பது நூற்பா. இந்தப் பகுதி ஒருபொருள் பல் பெயர்த் தொகுதி என்னும் பிரிவைச் சேர்ந்தது.

மேலும் உரியியலில் ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கடி என்னும் ஒரு சொல்லுக்குப் பதின்மூன்று பொருள்கள் உரியன வாம். அவை :

' கடி யென் கிளவி : காப்பே, கூர்மை,

விரையே, விளக்கம், அச்சம், சிறப்பே, விாைவே, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவே, மன்றல், கரிப்பின் ஆகும்.”