பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

242

என்பது நூற்பா. இந்தப் பகுதி ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி என்னும் பிரிவைச் சேர்ந்ததாகும்.

இன்னும் உரியியலில், உயிர்ப் பொருள்களின் பண்புகள், உயிரல் பொருள்களின் பண்புகள் போன் றனவும் சொல்லப்பட்டுள்ளன. ஆகக்கூடியும் நன்னூ லில் நிகண்டுக் கூறு (அம்சம்) மிக மிகச் சுருங்கிய அளவிலேயே உள்ளது. ஆசிரியர் பவணந்தியார், மொழியிலக்கண நூலாகிய இந் நன்னூலில் எல்லாச் சொற்களையும் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க முடி யாது; அவற்றை யெல்லாம் பிங்கலம் முதலாகிய நூற் களில் விரிவாகக் கண்டு கொள்க' என உரியியலின் இறுதியில் கூறியிருப்பது ஈண்டு மீண்டும் நினைவு கூரத் தக்கது.

நன்னூலின் ஆட்சி

கன்னூல் எழுந்ததும் தொல்காப்பியத்தின் இடத் தைத் தான் பிடித்துக் கொண்டது. தொல்காப்பியத் தினும் சுருக்கமும் தெளிவும் நோக்கியும், பிற்காலத்து மொழி கடைக்கு ஏற்ற இலக்கண முடிபுகள் அமைக் துள்ளமை கருதியும் மக்கள் நன்னூலேயே மிகுதியாகக் கையாளத் தொடங்கினர். நன்னூல் பயின்ற பின்னரே தொல்காப்பியம் என்ற நிலை ஏற்பட்டது. நன்னூலின் ஆட்சி பெருகவே, மயிலைநாதர், ஆண்டிப்புலவர், சங்கரகமச்சிவாயர், சிவஞான முனிவர் முதலிய புலவர் பெருமக்களால் கன்னூலுக்கு உரைகள் எழுதப்பட்டுப் பலராலும் பயிலப்பட்டன. உரைகளின் எண்ணிக்கை யைக் கொண்டே ஒரு நூலின் ஆட்சியும் மாட்சியும் புலப்படுமே !