பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

244

பன்னிரண்டு தொகுதிகளை உடைய தாதலின், சூடா மணி பன்னிரண்டு நிகண்டு என்றும் இதனை அழைப்ப துண்டு.

ஆசிரியர் வரலாறு

சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டல புருடர்’ என்பவர். இவர் மண்டல புருடோத்தமன் என்றும் சில சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆல்ை இவர் தாமே எழுதிய தற்சிறப்புப் பாயிரப் பாடலில் தம் பெயர் மண்டலவன்’ எனக் கூறிக் கொள்கிருர். ஆசிரி யர், மண்டல புருடன் என்னும் தம் பெயரைத் தற். கூச்சத்தால் சுருக்கி, மண்டலவன் எனக் கூறிக் கொண்டிருக்கலாம்.

இவர் தொண்டை நாட்டில் உள்ள பெருமண்டுர் என்னும் ஊரினர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனல் தமது ஊர் வீரை (வீரபுரம்) என்று ஆசிரியரே சூடா மணி நிகண்டில் பல விடங்களில் கூறியுள்ளார். அரும் பொருள் விளக்க நிகண்டிலும் வீரை மண்டலவன்’ எனச் சுட்டப்பட்டுள்ளார். இவர் சைனம் எனப்படும். சமண சமயத்தினர்; குணபத்திரன் என்னும் சமண சமயப் பெரியாரின் மாணவர்; கிருட்டிணராயன் என் னும் அரசனல் ஆதரிக்கப் பெற்றவர். இந்த உண்மை களையெல்லாம், சூடாமணி நிகண்டின் முகப்பில் ஆசிரியரே பாடியுள்ள தற்சிறப்புப் பாயிரப் பாடல் களால் அறிந்து கொள்ளலாம். அந்தப் பாடல்கள் வருமாறு :