பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

247

மேலுள்ள பாடல்களால், - ஆசிரியரின் பெயர் மண்டலவன் (மண்டல புருடர்) என்பதும், அவர் அசோக நிழலில் அமர்ந்திருக்கும் அருகக் கடவுளை வணங்கும் சமண சமயத்தினர் என்பதும், திருப்புகழ் புராணம் என்னும் நூலொன்றும் இயற்றியவர் என் பதும், குணபத்திரரின் மானக்கர் (சீடர்) என்பதும், இயற்றிய நூலின் பெயர் சூடாமணி நிகண்டு என்ப தும், திவாகரருக்கும் பிங்கலருக்கும் காலத்தால் பிற் பட்டவர் என்பதும், குணபத்திரர் கட்டளை யிட்டதா லும், மேலும் சிலர் கேட்டுக் கொண்டதாலும் சிறப் பாகத் திவாகர அமைப்பைப் பின்பற்றியும், ஓரளவு பிங்கலத்தையும் தழுவியும் சூடாமணியை இயற்றி ர்ை என்பதும் கன்கு புலகுைம்.

இப்பாடற் பகுதியில் மண்டல புருடர் தம் ஆசான கிய குணபத்திரரை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார் : குணபத்திரர் குன்றை என்னும் ஊரினராம்; ஞாயிறு போல் தோன்றி நன்மை செய்பவராம்; பாண்டியரே போல் தமிழ் வளர்ப்பவராம்; ஞான அரசாட்சி புரிபவ ராம்; சோதிடநூல் வல்லவராம் - இவ்வாறெல்லாம் புகழ்ந்து மண்டலபுருடர் தம் ஆசானன்பை (குரு பக்தியை) வெளியிடுகிருர். இக்காலத்தாரிடம் இத் தகைய கன்றியுணர்வு உண்டா ?

மற்றும் மண்டல புருடர், சூடாமணியின் பன் னிரண்டு தொகுதிகளின் இறுதியிலும், இத்தொகுதி யைச் சேர்ந்த இத்தனை பாடல்களும் இன்னுர் மானக் கராகிய இன்னர் எழுதியவை என்று அறிவிக்கும் வாயிலாகத் தம்மையும் தம் ஆசானையும் குறிப்பிட் டுள்ளார். அப்பாடற் பகுதிகள் வருமாறு :