பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

252

மண்டல புருடர் சூடாமணியில் பன்னிரண்டாம் தொகுதியின் தொண்ணுளரும் செய்யுளில், பன்னிரண் டாம் நூற்ருண்டில் வாழ்ந்த பாற்கரர் என்பவர் இயற் றிய பாற்கரம்' என்னும் கணித நூலைக் குறிப்பிட்டுள் ளார் :

' குணகாரம் பரியச்சந் தான்

குறித்த பாற்கரமே மூலம்.”

என்பது அப்பாடற் பகுதியாம். இதல்ை, மண்டல புருடர் பன்னிரண்டாம் நூற்ருண்டிற்குப் பிற்பட்ட வர் என்பது மட்டும் உறுதி; இதுபோலவே, பதினரும் நூற்ருண்டிற்கு உட்பட்டவர் என்பதும் உறுதி.

நூலின் அமைப்பு

தொகுதியும் பாடலும்

சூடாமணி திவாகரம் போலவே புன்னிரண்டு தொகுதிகள் உடையது அவையாவன :- -

1. தேவப் பெயர்த் தொகுதி பாடல்கள் ...93 2. மக்கட் பெயர்த் தொகுதி ,, ...106 3. விலங்கின் பெயர்த் தொகுதி 33 ...78 4. மரப் பெயர்த் தொகுதி 68... و و 5. இடப் பெயர்த் தொகுதி 3 3 ...68 6. பல்பொருள் பெயர்த் தொகுதி 33 ...35 7. செயற்கை வடிவப் பெயர்த்தொகுதி , ...76 8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி ,, ...82 9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி 3y ...67 10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி ,, . ...52