பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

253

11. ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி , ...310 12. பல்பெயர்க் கூட்டத்து !

ஒரு பெயர்த் தொகுதி ,, ...154

தொகுதிகளின் எண்ணிக்கையில் சூடாமணி திவாகரத்தை ஒத்திருப்பதல்லாமல், தொகுதிகளின் பெயர்களிலும் ஒத்திருப்பது காண்க. சூடாமணியைத் திவாகரத்தின் விரிவான மறு பதிப்பு என்று கூறலாம். இதன் பன்னிரண்டு தொகுதிகளிலும் மொத்தம் 1189 செய்யுட்கள் உள்ளன. ஆசிரியர் தம்மைப் பற்றிக் கூறியுள்ள தற்சிறப்புப் பாயிரப் பாடல்கள் எட்டையும் சேர்த்தால் மொத்தம் சூடாமணியின் பாடல்கள் 1197 ஆகும். ஆறுமுக காவலர் பதிப்பில் மொத்தம் 1197 செய்யுட்கள் காணப்படுகின்றன. ஆனல் பழைய பாடல் ஒன்று, சூடாமணியின் மொத்தச் செய்யுட்கள்

1125 என்றே கூறுகிறது.

ஒரு பழம் பாடலில் 1125 செய்யுட்கள் எனக் கூறப் பட்டிருப்பதையும், ஆறுமுக நாவலர் பதிப்பில் 1197 செய்யுட்கள் இருப்பதையும் - அதாவது 72 செய்யுட் கள் மிகுதியாக இருப்பதையும் கண்ட சிலர், பிற்காலத் தில் யாரோ 72 செய்யுட்களைப் புதிதாகப் பாடி இடைச் செருகலாகச் சேர்த்துவிட் டிருக்கவேண்டும் எனக் கூறுகின்றனர்.

எதை கம்புவது 1125 செய்யுட்களே என முடிவு கட்டும் பழம் பாடலை எழுதியவர் தவருகக் கணக்கிட் டிருக்கக் கூடாதா ? அவருக்குக் கிடைத்த ஒலைச் சுவடி யில், ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக 72 செய்யுட்கள் விடுபட்டிருக்கக் கூடாதா ? ஒலை காணுமற் போவதும் செல்லரித்துப் போவதும் இயற்கை தானே !