பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

258

(7) பதினேராவது தொகுதிமட்டும், தில்லை - கடராசசுவாமி அவர்களால் பார்வையிடப்பட்டு, பூ. மு. இராசு முதலியாரின் சென்னை புரசை ரூபி அச்சுக் கூடத்தில் (1910) பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படியாகப் பலரால் பலமுறை பதிப்பிக்கப்பட் டிருப்பதிலிருந்து சூடாமணியின் ஆட்சியும் மாட்சியும் விளங்கும்.

பதினேராவது (தொகுதி) நிகண்டு

சூடாமணியின் பதினேராம் தொகுதி, ஒரு சொல் லுக்குரிய பல பொருள்களையும் கூ றுகின்ற இக்கால அகராதிகளைப் போன்ற (Homonyms) பகுதியாதலின், அக்காலத்தில் இத்தொகுதி மிகவும் முதன்மை பெற் றிருந்தது. நிகண்டு படித்தவர்கள் என்ருல் சூடாமணி யின் பதினேராவது தொகுதியைப் படித்தவர்கள் என்று பொருள் கொள்ளும் அளவுக்கு இத்தொகுதி உயர்ந்திருந்தது. இதேைலயே இத்தொகுதி பதி னேராவது நிகண்டு என ஒரு தனி நிகண்டு நூல் போல் அழைக்கப்பட்டு வந்தது. பதினேராவது நிகண்டு என்பது சூடாமணியின் ஒரு பகுதி என்பதை அறியாமல், அதனை ஒரு தனி நிகண்டாகவே அன்றும் சிலர் கருதினர் - இன்றும் சிலர் கருதுகின்றனர்.

புதுவை கயகப்ப முதலியார், தில்லை நடராசசுவாமி முதலியோர் இப்பதினேராம் தொகுதியை மட்டும் தனி நூலாக அச்சிட்டிருப்பதொன்றே இத்தொகுதியின் ஆட்சிக்கும் மாட்சிக்கும் போதிய சான்றகும். கயகப்ப முதலியாரின் பதிப்பில் ஒரு சொல் பல பொருட் டொகுதி என்பது நூற்பெயராகவும், கடராச சுவாமி பதிப்பில் பதினேராவது கிகண்டு என்பது நூற்