பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

260

13. ல கர எதுகை 16. ள கர எதுகை 14. வ கர எதுகை 17. ற கர எதுகை 15. ழ கர எதுகை 18. ன கர எதுகை

எடுத்துக் காட்டாக, இத்தொகுதியிலிருந்து ககர எதுகைக்கு ஒரு செய்யுளும், னகர எதுகைக்கு ஒரு. செய்யுளும் வருமாறு :

(ககர எதுகை)

பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேசு மகரமே சுருப்பூந் தாதாம் வசிகூர்மை வசியம் வானே அகம்மனம்மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே.”

இப்பாடலில் பகவன், பகல், மகரம், வசி, அகம் என்னும் ஐந்து சொற்கட்கு உரிய பொருள்கள் தரப் பட்டுள்ளன. ககர எதுகைச் சொற்களிடையே வசி’ என்னும் சகர எதுகைச் சொல்லும் இப்பாடலில் கலந்து விட்டிருக்கிறது.

(னகர எதுகை) " தானமே மதம் நீராட்டுத் தருகொடை சுவர்க்கம்

தாற்பேர் பீனமே பருமை பாசி பேடுஎன்ப பேடி ஊரே நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கு நீரும் வானம் ஆகாயம் என்ப மழை உலர்மாமும் ஆமே.”

இப்பாடலில், தானம், பீனம், பேடு, கானம், வானம் என்னும் ஐந்து சொற்களின் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. னகர எதுகைச் சொற்களி னிடையே பேடு என்னும் டகர எதுகைச் சொல்லும் இப்பாடலில் கலந்துவிட்டது. .