பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

263.

கலந்திருக்கிறது. எடுத்துக் காட்டாக மேலே பார்த்த ன்கர எதுகைப் பாடலின் இரண்டாம் அடியில் பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே என பீனம் என் னும் னகர எதுகைச் சொல்லுக்கு மோனையாகப் பேடு" என்னும் டகர எதுகைச் சொல் போடப்பட்டுள்ளது. மோனை என்பது முதல் எழுத்து ஒத்திருப்பது. பீ” என்னும் எழுத்துக்கு பே' என்னும் எழுத்து மோனை யாகும். ஒவ்வோர் அடியிலும் இவ்வாறு மோனை அமைய வேண்டியது யாப்பிலக்கண முறையாகும். ஒத்த எதுகை உடைய மோனைச் சொல் இருந்து கிடைத்தால் ஆசிரியர் போடுவார்; கிடைக்காவிட்டால் வேறு எதுகை உடைய மோனைச் சொல்லைத்தானே போடவேண்டும்? அவர் என்ன செய்வார் ! கலப்பு எதுகை ஏற்பட்டதன் பொருட்டு (காரணம்) இப்போது புலனுகலாம்.

மற்றும், சில விடங்களில் சொல்லுக்குப் பொருள் கூறும்போது வேண்டாத அடைமொழிச் சொற்களைச் சேர்த்திருப்பதால் பொருள் மயக்கம் ஏற்படுகிறது - என்று ஒரு குறை கூறப்படுகிறது. எடுத்துக் காட்டாக, விழவு என்னும் சொல்லுக்குப் பொருள் கூறவந்த ஆசிரியர், .

“ விழவு என்ப மிதுன ராசி விளங்கும் உற்சவமு மாகும்.'

என்று பாடியுள்ளார். விழவு என்னும் சொல்லுக்கு மிதுனராசி, உற்சவம் என்னும் இரண்டு பொருளாம். இங்கே, உற்சவத்தை விளங்கும் உற்சவம் என அடை. மொழி தந்து குறிப்பிட்டுள்ளார். விழவு என்பதற்கு விளங்கும் என்றும் ஒரு பொருள் உண்டு போலும் என்று சிலர் மயங்கக் கூடும். ஆனல் இத்தகைய,