பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23



சொல்லிலக்கணம் :

தொல்காப்பியச் சொல்லதிகாரம் சொல்லிலக்கணம் (Etymology) கூறும் பகுதியெனக் கண்டோம். அதில் சொற்களின் பல்வேறு நிலைகளும் இயல்புகளும் கூறப்பட்டிருப்பதோடு, இடையியலிலும் உரியியலிலும் சொற்கட்குப் பொருள்களும் கூறப்பட்டிருப்பதையும் அறிந்தோம். இதைக் கொண்டு, சொல்லுக்குப் பொருள் கூறும் அகராதித் துறையும் சொல்லிலக்கணத்தின்பாற்பட்டதே என்பது புலனாகும்.

இவ்வாறு சொல்லிலக்கணத்தின் ஓர் உறுப்பாயிருந்த அகராதித் துறை, நாளடைவில் அதிலிருந்து பிரிந்து ஒரு தனிக்கலையாயிற்று. எல்லாக் கலைகளிலுமே இவ்வாறு நிகழ்வது இயற்கையே. பொதுவாக மக்களின் உள்ளத்து (மனத்து) இயல்புகளைக் கூறவெழுந்த உளவியல் (Psychology) கலையிலிருந்து, குழந்தை உளவியலும் (Child Psychology), கல்வி உளவியலும் (Educational Psychology) பிரிந்தது போல, சொல்லிலக்கணத்தி (Etymology) லிருந்து அகராதிக் கலை (Lexicography) பிரிந்ததில் வியப்பில்லை.

தொல்காப்பிய உரியியலின் வேலையைப் பிற்காலத்தில் சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி முதலிய நூல்கள் எடுத்துக் கொண்டன. இந்நூற்களில் சொற் பொருள் தவிர வேறெதுவும் கிடையாது. தொல்காப்பியத்தில் இடைச் சொற்கள்-உரிச் சொற்கள் மட்டும் குறுகிய அளவில் பொருள் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்நூற்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல், வட சொல் எனப் பல்வகைச் சொற்களும் பரந்த