பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

266

முதன்மையானதாகவும் பிறரால் பின்பற்றப்பட்ட தாகவும் தெரிகிறது. பதினேராம் தொகுதியாகிய ஒரு சொல் பலபொருள் தொகுதியை எல்லோரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும்வண்ணம் ஓர் உரை

எழுதுக என்று நாதமுனி என்பவர் கேட்டுக்கொள்ள கயகப்ப முதலியார் தெளிவாக உரை எழுதினராம்.

இந்தச் செய்தி கயகப்ப முதலியாரது உரைநூற் பதிப் பின் தொடக்கத்தில், அவரைப் புகழ்ந்து புதுவைபொன்னுசாமி முதலியாரால் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ள

உரைப்பாயிரப் பாடலால் தெரியவருகிறது. அப்பாடல் வருமாறு :

உரைப் பாயிரம் (நேரிசை யாசிரியப்பா)

“ வளமலி கடல்சூழ் மாநில மதனில்

உளநூல் எவற்றினும் உறுபயன் யாவையும் கற்றுணர்ந் தவரும் கல்லா தவரும் சற்றும் உளனிற் றளர்வெய் தாமல் வேங்கடம் குமரி மேற்கடல் கீழ்க்கடல் ஆங்கள் வெல்லையுள் அருந்தமிழ்ப் பெளவத் திலகும் அமிழ்தென இயைந்திடும் ஒருசொற் பல்பொருள் தொகுதி பகர்பொருள் அனைத்தையும் வெளிப்படை யாக விதந்ததற் கோருரை எளிதின் உணர இயற்றுதி என்ன மருமலர்ப் பொழிலு மணிதிகழ் மாடமும் பெருகுதல் வளங்கள் பிறங்கும் ஆவணமும் சேலூர் கயமும் செறிந்தெழில் விளங்கும் வேலூர்க் கதிபன் வென்றிசேர் மகிபன் திருமால் பதத்தைச் சிந்தையில் இருத்தும் பெருமான் தமிழ்மறை பெரிதுணர் பெற்றியன் கருணைச் சாகரம் கல்விக் காகரம்