பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

268

ந நாதமுனி மேழிக் கொடி உடையவர். இவர், ஆடாமணியின் பதினேராம் தொகுதிக்கு உரை எழுதும் படி கயகப்பன் என்னும் அறிஞரைக் கேட்டுக்கொண் டார். இந்த கயகப்பர் பல்கலைப் புலவர்; எங்கும் பரவிய புகழினர்; பெருஞ் செல்வர்; கங்கை குலத்தினர்; தோளில் குவளைமாலை அணிபவர்; கொடைப் பண் பினர்; புதுவை என்னும் ஊரினர். இவர், தொல்காப் பியம், திவாகரம் முதலிய நூற்களை ஆராய்ந்ததன் துணைகொண்டு பல நூற்களிலிருந்து தக்க மேற் கோள்களும் காட்டிப் பிழையின்றி உரையியற்றினர்

மேலுள்ளாங்கு, பதினேராம் தொகுதிக்கு உரை யெழுதியவர் பெயரே இவ்வளவு பெருமிதப்படுத்தப் படுவதை நோக்குவோர், அப்பதினேராவது தொகுதி எவ்வளவு இன்றியமையாததாகப் போற்றப்பட் டிருக்கும் என்பதையும் நுனித்துணர முடியும்.

இனி, இத்தொகுதியை மாதிரி பார்ப்பதற்காக இரண்டே இரண்டு சுவையான இடங்களை எடுத்துக்

கொள்வாம் :

உப்பு என்னும் சொல்லுக்கு, பெண்கள் ஆடும் ஒரு வகை விளையாட்டு, உவர்ப்புத் தன்மை(உப்புக் கரிப்பு), கடல், இனிமை என நான்கு பொருள்கள் உண்டாம்:

' உப்பு மெல்லியலாாாடல் உவர் கடல் இனிமை நாற்பேர்.”

என்பது சூடாமணிப் பாடல் பகுதி. இக்கான்கு பொருள்களுள், மெல்லியலாராகிய பெண்கள் உப்பு குந்தம் - உப்பு மூட்டை போன்ற பெயர்களில் ஆடும் உப்பு விளையாட்டு என்னும் பொருளும் புதிதன்று; உவர்ப்புத் தன்மை, கடல் என்னும் இரண்டு பொருள்