பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

273

மார்க்கண்டேயன் சிவனது உதவியால் எமனை வென்ற புராணக் கதை உண்டு. அறநெறிப்படி நோக்கின், சிவன் எமனை உதைத்து மார்க்கண்டேயனைக் காத்தது பொருந்தாச் செயலே. இது கட்டுக் கதையாதலின் இதனை விடுப்பாம்.

இதுகாறுங் கூறியவாற்ருல், துலாக் கோல்போல் எமன் நடுநிலைமை உடையவன் - சம நோக்கினன் என்பது பெறப்படும். இதனுலேயே இவனை எம தருமன்’ என்றுகூட அழைப்பதுண்டு. இதேைலயே இவனுக்குச் சமன் என்னும் பெயர் வைக்கப்பட்டது. மேலும் இவன், அவரவரது குற்றத்திற் கேற்பக் கண்டிப்பான தீர்ப்பு வழங்குவதாகவும் கூறுவதுண்டு

திருவாளர் யமதருமனைப் பற்றிய செய்தி கம்பத் தக்க தன்று என்று சொல்லப்படினும், சமன் என்னும் சொற் பொருள் நயம் அறிவிற்கு விருந்தாயுள்ளது.

இவ்வாறு சூடாமணியின் பதினேராவது தொகுதி யின் சொற்பொருள் கயச் சோலைக்குள் புகுந்தால் எண்ணற்ற இடங்களில் அமர்ந்து இளைப்பாறலாம்.

மூன்ருவதும் முதலாவதும்

சூடாமணி பவணந்தியார் காலத்திற்குப் பின்னல் எழுந்த நிகண்டாதலின், அவர் தமது கன்னூலில் இதனைக் குறிப்பிடவில்லை. ஆயினும், அந் நன்னூலில் உள்ள பிங்கலமுதலா நல்லோர் உரிச்சொலில்: என்னும் நூற்பாப் பகுதிக்குப் பிற்காலத்தில் உரை யெழுதிய சங்கர நமச்சிவாயர் என்னும் பெரும்புலவர் இந்தச் சூடாமணியை மறந்தாரிலர் - மறக்கத்தான்