பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

274

முடியுமா ? பிங்கலம் திவாகரம் சூடாமணி முதலிய நூற்களுள்' என உரை விரித்துப் போந்தார் அவர்.

எனவே, நிகண்டுகளுக்குள் சூடாமணி மூன்ருவது இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தமை புலனுகும். காளடைவில் முதலிடத்தையும் இது பெற்றுவிட்டது என்றும் துணிந்து கூறலாம். ஆம்! அருமருந்தைய தேசிகர் தாம் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டில், சூடாமணியின் ஆசிரியராகிய வீரை மண்டலவருக்கே முதலிடம் தந்துள்ளார். மண்டல புருடர் முதலான ஆசிரியர்கள் எழுதிய நிகண்டு களைப் பின்பற்றித் தாம் தமது நிகண்டை இயற்று வதாகப் பாயிரத்தில் கூறியுள்ளார். அப்பாடல்

வருமாறு :

' மாவியல் சிறக்கும் வீரை

மண்டலவன் காங்கேயன் ரேவன சித்தன் செஞ்சொற்

கயாதரன் இவராற் சொற்ற பாவியல் நூற்கூ ருேர்சொல்

பல்பொருள் தொகையெலாம் சேர்த்து ஒவிலா வளஞ்சிறப்ப

ஒருபெரு ருால தாக.”

இந்தப் பாடலில் அருமருந்தைய தேசிகர் மண்டல புருடருக்கு முதலிடம் கொடுத்திருக்கிருர் என்ருல், அவரது சூடாமணி நிகண்டுக்கு முதலிடம் கொடுத் துள்ளார் என்பதுதானே பொருள் ! திவாகரம், பிங்கலம் ஆகிய இரண்டையும் இருட்டடிப்புச் செய்து விட்டு, அவற்றின் இடங்களை இந்தச் சூடாமணி பிடித்துக்கொண்டதை இப்பாடலால் அறியலாம்: