பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24



அளவில் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் போலவே இந்நூற்களிலும் சொற்கள் அகர வரிசையில் இல்லாமல் கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்தில் உரிச் சொற்களும் இடைச் சொற்களும் பொருள் கூறப்பட்டிருப்பதைக் கண்ட பிற்காலத் தமிழறிஞர்களின் உள்ளங்களில் பெயர்ச் சொல், வினைச் சொல் முதலிய சொற்கட்கும் ஏன் பொருள் கூறக்கூடாது? என்ற உணர்வு தோன்றியிருக்க வேண்டும். எனவே அவர்கள், எல்லாவகைச் சொற்களையுஞ் சேர்த்துத் தனி நூற்கள் எழுதத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள். அப்படித்தான் சொல்லிலக்கணத்திலிருந்து அகராதித் துறை தனியாகப் பிரிந்திருக்க வேண்டும். இந்த முறையில் திவாகரம், பிங்கலம் முதலிய நூற்கள் பலவகைச் சொற்களுடனும் விரிவாகத் தோன்றியிருப்பினும், எளிய சொற்கள் முதற்கொண்டு இக்கால அகராதிகளில் எண்ணிறந்து காணப்படுவது போல், அந்நூற்களில் காணமுடியாது; அரிய சொற்கள் மட்டுமே அந்நூற்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, திவாகரம், பிங்கலம் முதலிய நூற்கள் தொல்காப்பிய உரியியலை நோக்க மிகப் பரந்துபட்டவையெனினும், இக்கால அகராதிகளை நோக்க மிகச் சுருங்கியனவேயாம்.

மேலும், தொல்காப்பியக் காலத்திற்கும், திவாகரம் பிங்கலம் முதலிய நூற்களின் காலத்திற்கும் நடுவே பல நூற்றாண்டு காலம் இடைவெளியுள்ளது என்னுஞ் செய்தி ஈண்டு எண்ணத் தக்கது. இந்தத் துறையில் கிடைத்திருக்கும் நூற்களில் சேந்தன் திவாகரமே முற்பட்டது. அது, ஒருதோற்றம் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அதாவது இற்றைக்கு 1200 ஆண்டு