பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

277

ஆசிரியரின் அறிவு நுட்பத்திற்கும் புலமையின் தலைமைக்கும் போதிய சான் ருகும்.

காலம்

ஆசிரியர் இரேவண சித்தர் அகராதி நிகண்டின் பாயிரத்தில், சகாத்தம் 1516- ஆம் ஆண்டில் இந்: நிகண்டைத் தாம் இயற்றியதாகக் கூறியுள்ளார் :

' அரிய சகாத்தம் ஆயிரத் தைஞ்னுாற்று

ஒருபத் தாறென உரைத்திடும் ஆண்டினில்...... * * * * * * * * * * * * * * * * * * * * > . . . அகராதி நிகண்டென

ஒதினன் யாவரும் உணர்ந்திட நினைந்தே.”

என்பது அப்பாயிரப் பாடற் பகுதி. சக ஆண்டுடன் 78 ஆண்டுகள் கூட்டிக் கொண்டால் கி. பி. ஆண்டு கிடைக்கும். எனவே, சக ஆண்டு 1516 என்ருல், கி.பி. 1594-ஆம் ஆண்டில் அகராதி நிகண்டு இயற்றப் பட்டது என்பது தெளிவு. ஆகவே, ஆசிரியரின் காலம் பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதி என்பது வரைக் கும் உறுதி. மேலும் அவர் அகராதி நிகண்டு இயற்றிய பின்னும் பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் வாழ்க் திருக்கலாம்.

நூல் அமைப்பு

திவாகரத்தில் உள்ள பன்னிரு தொகுதிகளும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளன அல்லவா ? அம் மூன்றனுள் இரண்டாவதாகிய ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி'என்னும் பிரிவைச் சார்ந்ததே அகராதி நிகண்டு. அதாவது திவாகரம், சூடாமணி ஆகிய நிகண்டுகளிலுள்ள பதினேராவது