பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

278

தொகுதி யொன்றுமட்டுமே அகராதி நிகண்டாக விரிந்துள்ளது. ஆனல் அமைப்பில் அவற்றினும் இது வேறுபட்ட தாகும்.

இந்நிகண்டு நூற்பா (சூத்திர) யாப்பினலானது. இந்நூலினைப் பத்துத் தொகுதியாகப் பிரித்து, மொத்தம் 3368 நூற்பாக்கள் எழுதியிருப்பதாக ஆசிரியர் பாயிரத்தில் கூறியுள்ளார். ஆனல் அச் சிட்டநூலின் இறுதியில் 3334 பாக்கள் என்று தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இடையிடையே 34 பாக்கள் எப்படியோ விடுபட்டுப் போயின.

அகர வரிசையை யொட்டி இந்நூல் பத்துத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ ைவ ...tl. IITG).JGöT :

அகராதிப் பேர்த் தொகுதி ககராதிப் பேர்த் தொகுதி சகராதிப் பேர்த் தொகுதி ஞகராதிப் பேர்த் தொகுதி தகராதிப் பேர்த் தொகுதி

நகராதிப் பேர்த் தொகுதி பகராதிப் பேர்த் தொகுதி

மகராதிப் பேர்த் தொகுதி யகராதிப் பேர்த் தொகுதி வகராதிப் பேர்த் தொகுதி

1

'அ' தொடங்கி 'ஒள' வரையும் உள்ள உயிர் எழுத்துக்களை முதலிலே உடைய சொற்களெல்லாம் அகராதிப் பேர்த் தொகுதியிலும், 'க: தொடங்கி கெள வரையும் உள்ள எழுத்துக்களை முதலிலே