பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

280

' சோதி விநாயகர் பாத மெனமுடி

வோதிய நாவினுர் நீதி யுளார்களே.”

' வெள்ளை வாரணப் பிள்ளையார் பதம்

உள்ளுவார் மனக் கள்ள மாறுமே.”

இவையன்றி, ஒவ்வொரு தொகுதியின் முன்ன இறைவனை வணங்கி இன்ன தொகுதியைச் செ கிறேன் என்று கூறியே தொடங்கியுள்ளார்.

இஃதிங்ங்ன மிருக்க, இந்நிகண்டின் ஒலை சுவடியில் நூலின் தொடக்கத்தில் பின்வரும் பாடல் காணப்படுகிறதாம் :

" தேன ருமகிழ்த் தொடையலு மவுலியுந்

திருக்கிளர் குழைக்காதுங்

கான ருமலர்த் திருமுகச் சோதியுங்

கயிரவத் துவர் வாயும்

மோன மாகிய வடிவமு மார்பமு

முத்திசைத் திருக்கையும்

ஞான தேசிகன் சரணதா மரையுமென்

நயனம் விட் டகலாவே.'

இது திருமால் வணக்கப் பாடலாகும். அகராதி நிகண்டின் ஆசிரியர் இரேவண சித்தரோ சைவர். எனவே இப்பாடலை, ஏடு பெயர்த் தெழுதிய வைணவ ரொருவர் தம் வழிபடு கடவுளை வழிபட்டு வேலையைத் தொடங்குமுகத்தான் எழுதிச் சேர்த்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆகவே, இரேவண சித்தர் பிள்ளையார் காப்பு மட்டுமே எழுதினர் என்பது தெளிவு.

பிள்ளையார் வணக்கத்தையடுத்து ஆசிரியரின் தற்சிறப்புப் பாயிரப் பாடல் அமைந்துள்ளது. அதில்