பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

287

' மாவியல் சிறக்கும் விரை

மண்டலவன் காங்கேயன் ரேவண சித்தன் செஞ்சொற்

கயாகரன் இவராற் சொற்ற...” என்பது அரும்பொருள் விளக்க நிகண்டுப் பாடற்பகுதி. எனவே, பதினரும் நூற்றண்டினரெனக் கருதப்படும் மண்டல புருடர்க்கும், பதினெட்டாம் நூற்ருண்டின ரெனக் கருதப்படும் அரு மருந்தைய தேசிகருக்கும் இடைப்பட்டவராகக் காங்கேயனைக் கொண்டு, உரிச் சொல் நிகண்டின் காலம் பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதி என முடிவு கட்டுதல் ஒரு சார் பொருத்த முடைத்து.

நூலின் அமைப்பு இந் நிகண்டு வெண்பாவால் ஆனது. நினைவில் இருத்துதற்கு வெண்பா ஏற்றது - எளியது. ஒரு முறை படித்தாலேயே வெண்பா மனப்பாடமாகிவிடும் என்று சொல்லுவது வழக்கம். அதனல் ஆசிரியர் வெண்பாவைத் தேர்ந்தெடுத்தாராம்.

இந்நிகண்டு திவாகரம்போல் பன்னிரண்டு தொகுதிகள் உடையதாம். அவற்றில் மொத்தம் 287 வெண்பாக்கள் உள்ளனவாம். சில ஓலைச் சுவடிகளில் பன்னிரண்டு தொகுதிகள் 287 பாடல்களுடன் காணப் படுகின்றன. ஆனால், வேறு சில சுவடிகளில் ஒலி பற்றிய பெயர்த் தொகுதியும் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியும் ஆகிய இரண்டும் நீங்கலாக மற்ற பத்துத் தொகுதிகளே 220 பாடல்களுடன் காணப்படுகின்றன. பன்னிரண்டு .ெ தா. கு தி க ள் என்னும் கொள்கையினர், ஒலி பற்றிய பெயர்த் தொகுதியும் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த்