பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

289

ரா. ரா. அருணசலம் சதாசிவம் பிள்ளையால் யாழ்ப் பாணத்தில் அச்சிடப்பட்டதாம். இதில் எத்தனைத் தொகுதிகள் உள்ளனவென்று தெரியவில்லை. பின்னர் 1890-இல் தமிழ்ப் புலவர் சிவன் பிள்ளை அச்சேற்றினர். இதில் பன்னிரண்டு தொகுதிகளும் உள்ளன. அதன் பின்னர் 1905-இல் சுன்னுகம் அ. குமாரசாமிப் பிள்ளை பதிப்பித்தார். இதிலும் பன்னிரண்டு தொகுதிகளும்

உள்ளன.

இவற்றைக்கொண்டு ஆராயுங்கால், உண்மையில் உரிச்சொல் நிகண்டு பத்துத் தொகுதிகள் உடையதா அல்லது பன்னிரண்டு தொகுதிகள் உடையதா என அறுதியிடல் அரிய செயலெனத் தோன்றுகிறது. ஆனால், கொல்லம் ஆண்டு 950-இல் அதாவது கி.பி. 1775-ஆம் ஆண்டில் ஏடுபெயர்த்து எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் உரிச்சொல் நிகண்டின் ஒரு பழைய பனை ஓலைச் சுவடியில் உள்ள ஒரு பாடல்: ‘பராக்கிரம பாண்டிய தேவன் என்பவன், உரிச்சொல் நிகண்டினைப் பத்துத்தொகுதியாக ஒழுங்குபடுத்தினன்’ எனக் கூறுகிறது.

" உத்தம சீலத்துக் காங்கேயன் சொன்ன உரிச்சொல்

தன்னை வைத்த மனத்து......... - - - - - - - - - பராக்கிரம பாண்டிய தேவன் கண்டீர் பத்துத் தொகுதியிற் சேர்த்தான் எவரும் படித்திடவே.” என்னும் பழம் பாடலைக் காண்க. இப்பாடலைக் கொண்டு, உரிச்சொல் நிகண்டு பத்துத் தொகுதிகள் மட்டும் உடையது எனச் சிலர் அறுதியிட்டுக் கூறு கின்றனர். ஆல்ை, 'காங்கேயன் சொன்ன உரிச் சொல் தன்னை...... பராக்கிரம பாண்டிய தேவன்......