பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

290

பத்துத் தொகுதியிற் சேர்த்தான்...' என்னும் இதே பாடல் பகுதியைக் கொண்டு, உரிச்சொல் நிகண்டு முதலில்பத்துக்கு மேற்பட்ட தொகுதிகள் உடையதாய் இருந்திருக்கவேண்டும் என்றும், அவற்றுள் கட்டாயம் தேவைப்படாத சில தொகுதிகளைக் குறைத்து, எவரும் எளிதில் - சுருங்கிய அளவில் படித்துப் பயன் பெறும்படிப் பத்துத் தொகுதிகளுடன் உரிச்சொல் நிகண்டைப் பராக்கிரம பாண்டிய தேவன் ஒழுங்கு செய்து அமைத்தான் என்றும் கருத்து எடுத்துக் கொள்ளவும் இடமிருப்பது போல் தோன்றுகிறதே!

புதுவைப் பதிப்பு

உரிச்சொல் நிகண்டின் பல பதிப்புக்களுள் முதலாவதான புதுச்சேரிப் பதிப்பைப் பற்றிச்சிறப்பாக ஒருசிறிது நோக்குவாம் : இஃது இந்த (1965-ஆம்) ஆண்டுக்கு நூற்றிருபத்தைந்து ஆண்டு காலத் துக்கு முன் - அதாவது கி. பி. 1840-ஆம் ஆண்டில், புதுவை குவெர்னமா(gouwernement) அச்சுக்கூடத்தில்அதாவது அரசாங்க (government) அச்சகத்தில், சிற்றம்பலம் என்னும் தமிழாசிரியர் எழுதிய உரை யுடன் அச்சிடப்பட்டது. உரிச்சொல் நிகண்டுரை என்பது நூற்பதிப்பின் தலைப்புப் பெயராகக் கொடுக்கப் பட்டுள்ளது. இப்பதிப்பின் முதல் பக்கத்திலுள்ள செய்தி அப்படியே வருமாறு :

உரிச் சொல் நிகண்டுரை


ooo----- கனம் பொருந்திய......தேசத்துப் பிராஞ்சுத்

தலங்களுக்கு......யதிகாரியாகிய