பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

295

காகவும், ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதியில் உள்ள முதல் பாடலையும் அதன் உரையையும் காண்பாம் :

(பாடல்) ' அரிபன்றி தேரைகிளி பச்சையளி சிங்கம்

பரிகவிபாம் பிந்திான்மால் கால்கூற் றிருசுடர்தீ கோவிறை திக்குக் கிரணஞ் சலங்குலிச பாவுரைகண் பர்சுவர்க்க மம்பு.’

உரை

அரி என்றது - பன்றி, தேரை, கிளி, பச்சை, வண்டு, சிங்கம், குதிரை, குரங்கு, பாம்பு, தேவேந்திரன், விஷ்ணு, காற்று, இயமன், சந்திரன், சூரியன், கெருப்பு - ஆக 16

கோ என்றது - இராசா, திக்கு, கிரணம், நீர்,

வச்சிராயுதம், கூப்பிடல், சொல், கண், பூமி, தெய்வலோகம், அம்பு - ஆக 11

மேலுள்ள பாடலானும் உரையானும், அரி” என்னும் சொல்லுக்குப் பதினறு பொருள்களும் 'கோ' என்னும் சொல்லுக்குப் பதினுெரு பொருள்களும் கூறப்பட்டுள்ளமை புலனுகும். ஒவ்வொரு சொல்லுக்கும் இத்தனை பொருள்கள் என உரையாசிரியர் இறுதியில் எண்ணிக்கையிட்டுக் காட்டியிருப்பது தெளிவுக்கு வழி செய்யும்.

பிரஞ்சுக்காரர்களின் ஆட்சி நிலைத்த பிறகும் அரசினர் பள்ளிகளில் உரிச்சொல் நிகண்டு கற்பிக்கப் பட்ட புதுச்சேரியில் இன்று ஒர் உரிச்சொல் நிகண்டு. நூல் தேடிக் கண்டுபிடிப்பது அரிதாகிவிட்டது. காலத்தின் கோலம் என்னே !