பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

கயாதர நிகண்டு பெயர்க் காரணம்

கயாதர நிகண்டும் அக்காலத்தில் சிறந்த நிகண்டு களுள் ஒன்ருகப் பயிலப்பட்டு வந்தது. கயாதரர் என் லும் புலவரால் இயற்றப்பட்டதால் கயாதரம் எனப் பெயர் பெற்றது. ஆசிரியர் கெயாதரர் எனவும் பெயர் சொல்லப்படுவதால், நூலும் கெயாதரம் எனவும் சில ரால் அழைக்கப்படுகிறது. மற்றும் ஆசிரியர் கயா கரன் என்றும் சிலரால் அழைக்கப்படுவதால், நூலுக் கும் கயாகரம் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. அதாவது,

(1) மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்' என்னும் இதழில் கயாகர நிகண்டு எனத் தலைப்பு குறிப்பிடப் பட்டுள்ளது; ஆல்ை அத்தலைப்பின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செய்யுட்களில் கெயாதரம் என்றுள்ளது. - -

(2) வேதகிரி முதலியார் வெளியிட்ட இலக்கியக் களஞ்சியம் என்னும் நூலில் கயாகர நிகண்டு என உள்ளது.

(3) மாறனலங்காரம் என்னும் அணியிலக்கண நூலின் உரையில் கயாகரநிகண்டு எனச் சுட்டப் பட்டுள்ளது.

(4) ஆண்டிப் புலவரியற்றிய ஆசிரிய நிகண்டின் பாயிரத்தில், -

முறைபெறு கயாகரம் பகரும் அகராதியிவை

முற்றும் ஒன்ருய்த் திாட்டி’ எனக் கயாகரம் என்றே உள்ளது.