பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

297

(5) அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும் பொருள் விளக்க நிகண்டுப் பாயிரத்தில்,

' ரேவண சித்தன் செஞ்சொற்

கயாகரன் இவராற் சொற்ற”

என ஆசிரியர் கயாகரன் என்றே சுட்டப்பட்டுள்ளார். ஆல்ை, அரும்பொருள் விளக்க நிகண்டின் வேறு ஒர் ஒலைச்சுவடியில் கயாதரன் என்றுள்ளது.

(6) கயாதர நிகண்டின் ஒலைச் சுவடிகளிலும் கயாகரம் எனவும் கயாதரம் எனவும் இரண்டு நிலை களும் மாறி மாறிக் காணப்படுகின்றன. ஆசிரியர் பெயரோ கெயாதரன் எனக் காணப்படுகிறது.

இந்த நிலையில் எந்தப் பெயரை உறுதியாகக் கொள்வது? கை என்ருல் சொல், ஆகரம் என்ருல் இருப்பிடம்; எனவே, கையாகரர் என்ருல் சொற்கு இருப்பிடமானவர்-சொல்லின் செல்வர் என்பது பொருள்; எனவே, கையாகரரால் இயற்றப்பட்டது கயாகரம் ஆகும் என்பது ஒரு சாரார் கொள்கை. வட மொழி இலக்கணப்படி இந்தப் பொருளமைப்பு பொருங் தாது என்பது இன்னுெரு சாரார் கொள்கை.

சொற்பொருள் எதுவாயினும், கயாதரம் என்ற பெயரே கயாகரம் என்றும் கெயாதரம் என்றும் மாற்றி வழங்கப்பட்டிருக்கவேண்டும். கயாதரம் என்னும் சொல்லின் இடையிலுள்ள 'த' என்னும் எழுத்தின் வால்போன்ற கீழ் வளைவுக்கோடு சில ஓலைச் சுவடி களில் சரியாகப் பதிவு விழாமலோ அல்லது விழுந்தும்