பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

301

ருண்டினராகக் கருதப்படும் அருமருந்தைய தேசிகர் தமது அரும்பொருள் விளக்க நிகண்டில் கயாதரரைக் குறிப்பிட்டுள்ளதால், பதினெட்டாம் நூற்ருண்டுக்கு முற்பட்டவர் கயாதரர் என்பதுமட்டுமாவது உறுதி.

நூலின் அமைப்பு

கயாதர நிகண்டில் பின்வருமாறு பதினுெரு இயல்கள் உள்ளன:

(1) தெய்வப் பெயரியல் (2) இடப் பெயரியல் (3) மக்கட் பெயரியல்

(4) விலங்கின் பெயரியல் (5) மரப் பெயரியல்

(6) பல்பொருட் பெயரியல் (7) செயற்கை வடிவிற் பெயரியல் (8) பண்புப் பெயரியல் (9) செயல் பற்றிய பெயரியல் (10) ஒலிபற்றிய பெயரியல் (11) ஒருசொல் பல் பொருளியல்.

திவாகரம், சூடாமணி, உரிச்சொல் நிகண்டு ஆகிய நிகண்டுகளில் உட்பிரிவுகள் தொகுதி எனக் குறிப் பிடப்பட்டுள்ளன. பிங்கல நிகண்டிலோ வகை எனக் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம். ஆனல் கயாதரத்திலோ ஒவ்வொரு பிரிவும் இயல்' எனக் குறிக்கப்பட்டிருப்பது காண்க.