பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

304

கயாதரப் பாடல்களின் மாதிரிக்காகவும், அதே நேரத்தில் அந்தாதித் தொடையின் எடுத்துக் காட்டுக் காகவும் சில பாடல்கள் காண்பாம். தெய்வப் பெய ரியலின் தொடக்கத்தில் சிவன் பெயர்களைக் கூறும் இரண்டு பாடல்கள் வருமாறு :

  • ஆதி யணுதி அரன் சிவன் ஈசன னந்த னத்தன்

சோதி பிளுகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் பாதி உமாபதி சங்கரன் கங்காதரன் பகவன் பூதி புனை பாண்ட ரங்கன் பரமன் புராந்தகனே.”

" தக்கன் மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு தித்தன் இக்கன் படவிழித்தோன் காலகாலன் இறை அமலன் முக்கண் முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன் பித்தன் நக்கன் சடையோன் விடையூர்தி நாகா பாண னென்னே.”

மேலுள்ள இரு பாடல்களுள் முதல் பாட்டின் இறுதியில் (அந்தத்தில்) தகன்’ என்னும் அசை உள்ளது. அதனேடொத்த தக்கன் என்னும் சொல் இரண்டாம் பாட்டின் முதலில் (ஆதியில்) உள்ளது.

மற்றும், பதினேராம் இயலாகிய ஒரு சொல் பல் பொருளியலிலிருந்து இரு பாடல்கள் வருமாறு :

' அரிகடல் மால் பன்றி ஆயுதம் பச்சை அளி அருக்கன் எரிபுகை கிண்கிணி பெய் பரல் ஐம்மை யமன் கிளி கண் வரி வலி இந்திரன் மாருதம் நேமி மடங்கல் மது பரி பகை செந்நெற் கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே.”

பொன்னேர் இரும்பு சுசர் குரு மாடை பொலிவு திரு என்; ஏர் அழகு முழு பெற்றமும்; எல் ஒளி பகலாம்; தென்னே வனப்பும் இசை பாடலும் தென்றிசையும் என்ப; கொன் னே பெருமை பயனிலி அச்சம் கொளும் பொழுதே'