பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

305

மேலுள்ள இரு பாடல்களுள் முதல் பாடலில் அரி என்னும் சொல்லுக்கும், இரண்டாம் பாடலில் பொன், ஏர், எல், தென், கொன் ஆகிய சொற்கட்கும் உரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. மற்றும், முதல் பாட லின் இறுதியில் உள்ள பொன்’ என்னும் சொல்லே அடுத்த பாடலின் தொடக்கத்தில் அக்தாதித் தொடை யாய் அமைக்கப்பட்டிருப்பது காண்க. இப்படியாக, மற்ற நிகண்டுகளினும் கயாதரம் அமைப்பில் புதுமை பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாம்.

கயாதரத்தின் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் ஆசிரியர் தம் பெயர், வரலாறு, இயலின் பெயர் ஆகியவை கூறியிருப்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது.