பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307

307

" சிதம்பர பாரதிபாலன் புகழ்மடசை யுடையவளாந்

தேவி செம்பொற் பதம்பணிசெங் கைத்தலத்தான் ஈசுரபா ரதியெனுநூற்

பாவ லோனே.”

மேலுள்ள முதல் பாடலிலிருந்து, தமிழ் விக்கிரம ஆண்டு ஆவணித் திங்கள் மூலகாளில் (மூல நட்சத் திரத்தன்று) இங்கிகண்டு அரங்கேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

நூல் அமைப்பு

நிகண்டுத் தொகுதிகளின் முப்பெரும் பிரிவுகளுக் குள் ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி ' என் னும் இரண்டாம் பிரிவையும், பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்ரும் பிரிவையும் பற்றி மட்டும் இந்நூல் பேசுகிறது. ஆசிரியர் பின் வருமாறு மூன்று காண்டங்களாக நூலைப் பகுத்துக் கொண்டார்:

(1) ஒரு சொல் ஒரு பெயர்க் காண்டம் (2) ஒரு சொல் பல் பொருட் காண்டம் (3) பல் பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்க் காண்டம் இவற்றுள் முதல் காண்டத்தில், ஒரே பொருள் கூறும் 2800 சொற்கள் இடம் பெற்றுள்ளன; இரண் டாங் காண்டத்தில், பல பொருள் கூறும் 1465 சொற்க ளிடம்பெற்றுள்ளன. இவ்விரு காண்டங்களும் சொற்கட்குப் பொருள் கூறும் ஒரு சொல் பல் பொருட் பெயர்த் தொகுதி என்னும் பெரும் பிரிவைச் சார்க் தவை. மூன்ருங் காண்டமோ தொகைப் பெயர்களை விளக்குகிறது; இது பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் பெரும் பிரிவைச் சார்ந்தது.