பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

308

அகராதி நிகண்டைப் போலவே இக்கிகண்டும் அகர வரிசையில் அமைந்துள்ளது; இதிலும் சொற் களின் முதலெழுத்து வரைக்குமே அகரவரிசை கவனிக்கப்பட் டிருக்கிறது. ஆயினும், அகராதி நிகண்டைவிட இந்நிகண்டு படிப்போர்க்கு எளிதில் பயனளிக்க வல்லது; எங்ங்ன மெனின்,- பொருள் கூறும் சொற்கள் அகராதி நிகண்டில் பத்துப் பிரிவு களில் பரவலாகக் கூறப்பட்டுள்ளன; இதிலோ இரண்டே பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன. மேலும், அகராதி நிகண்டில் அம் முதல் இரு பெயர், அம் முதல் காற்பத்தாறு பெயர் என்ற சிக்கல் உள்ளது; இதில் அஃதில்லை. எனவே, பொருள் காணுவதற்காக ஒரு சொல்லைத் தேடி எடுக்க வேண்டுமாயின், அகராதி நிகண்டினும் பல்பொருள் சூளாமணி நிகண்டில் விரைவில் முடியும்.

இனி, பல்பொருள் சூ ள | ம ணி நிகண்டின் அமைப்பு முறையை விளக்கும் அகச் சான்ருக, ஆசிரியரே இயற்றியுள்ள பாயிரச் செய்யுட்களைப் பார்ப்போம் :

" தோன்றுகாண் டச்சடையான் தொல்சீர்சேர் நாமநூல்

மூன்றுகாண் டத்தால் மொழிகின்றேன்...”

" நாவுவந்த பல்பொருட் சூளாமணியைப் பாரில்

நாட்டியசீர் முதற்காண்ட மென்னும் பேர்தான்

பூவுவந்த ஒருபெயரோர் பொருளே யாகும்

போற்றிரண்டாங் காண்டம்பல் பொருளி னேர்சொல்

சேவுவந்த நெல்வேலிப் பெருமான் ஈன்ற

செவ்வேளின் திருவருளால் தேர்ந்து நான்சொல்

பாவுவந்த பெயர்மூன்ருங் காண்ட மாகும்

பலபெயர்க்கூட் டத்தொருபேர் பலவுத் தானே.”