பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

314

காலம்

ஆசிரியரின் காலம் பதினேழாம் நூற்ருண்டு என் றும், பதினெட்டாம் நூற்ருண்டு என்றும் இருவித மாகச் சொல்லப்படுகிறது. பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் பதினெட்டாம் நூற்ருண்டின் முற். பகுதியிலும் ஆசிரியர் வாழ்ந்திருக்கலாம் !

நூல் அமைப்பு கயாதரத்தைப் போலவே பாரதி தீபமும் கட்டளைக்

கலித்துறைப் பாடலால் ஆனது. ஆனல் அந்தாதித் தொடை இதில் இல்லை. இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உடையது. மொத்தம் 737 பாடல்கள் உள்ளன. முதல் பத்துத் தொகுதிகளில் மட்டும் 13,000 சொற்கள் இடம் பெற்றுள்ளனவாம். இந்நூலின் மாதிரிக்காக, முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதியின் தொடக்கத்தில் சிவன் பெயர்களைக் கூறும் பாடல் வருமாறு:' அான் இறை வன்சிவன் சங்கரன் நித்தன் அமலன் கங்கா

தான்உமை பங்கன் மலைவில்லி தற்பான் தானுச்சம்பு

புரதக னன்புனிதன் பிறைசூடி புலி யதளோன்

பரசு தரன் கயிலாயன் கபாலி பசுபதியே.”

மேலுள்ள பாடலில் ஒவ்வொரு பெயருக்கும் முன் ல்ை எந்தவிதமான அடைமொழியும் இன்றி, பெயர்கள் மட்டும் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப் பிடத்தக்கது. இதனுல் குழப்பம் இன்றிப் பெயர்களை கன்கு புரிந்து கொள்ள வாய்ப்புண்டல்லவா ?