பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

316

" மண்ணுளோ எறியப் பகுத்தனன் கயிலையான்

வடிவெடுத் தைந்தெழுத்தின் மந்த்ரவுபதேசஞ்செய் ஞானப்ர காசகுரு

வனசமல ரடிசூடுவோன்.” என்னும் பாடல்கள் போன்றவற்ருல் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலே முதல் பாட்டில் உள்ள

' வளையறுப் போர்குலன் பாவாடை வாத்தியார்

மைந்தனும் நற்கீரனே.”

என்னும் பகுதிக்குப் பதிலாக,

' மாநகர்க் கதிபனுயர் பாவாடை வாத்தியார்

மைந்தன் ஆண்டிப் புலவனே.”

எனச் சில ஓலைச்சுவடிகளில் உள்ளது.

காலம்

திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, கயா தரம், அகராதி நிகண்டு ஆகியவற்றின் கருத்துக்களை ஒன்ருய்த் தொகுத்து ஆசிரிய நிகண்டைத் தாம் இயற் றியதாக ஆண்டிப் புலவர் பாயிரத்தில் கூறியுள்ளார்:

முந்துள திவாகரம் பிங்கல நிகண்டுர்ே

முந்து காங்கயன் உரிச்சொல் முறைபெறு கயாகரம் பகரும் அகராதியிவை

முற்றும் ஒன்ருய்த் திரட்டி.”

என்பது பாயிரப் பாடல். எனவே, காங்கேயன், கயாதரர், இரேவணசித்தர் ஆகியோருக்குப் பிற்பட்ட வர் அல்லது அவர்தம் காலத்தை ஒட்டியவர் ஆண்டிப் புலவர் என்பது புலப்படும். அதனல், பதினேழாம்