பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

318

உடையது போல் தோன்றிலுைம் இப்பாடல் நான்கே அடிகள் கொண்டதாகும். ஒவ்வோர் அடியும் பன்னிரண்டு சீர்கள் உடையதாகி நான்கு வரிகளாக மடக்கி எழுதப்பட்டுள்ளது.

இப்பாடலில் பாண்டில், மா, வெறி, பாணி, கூலம் ஆகிய சொற்களுக்கு உரிய பொருள்கள் தரப்பட் டுள்ளன. பாண்டில் என்னும் சொல்லுக்கு எட்டுப் பொருளும் (எட்டும் பாண்டில்), மா என்னும் சொல் லுக்குப் பத்துப் பொருளும் ('பத்து மா), வெறி என் னும் சொல்லுக்கு எட்டுப் பொருளும் ('இரு காலும் வெறி') உரியன என்று ஆசிரியர் எண்ணிக்கை யிட்டுக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இம் முறையானது, அடை மொழிகளால் ஏற்படும் குழப்பத் திற்கு மருந்தாகித் தெளிவுக்கு வழி செய்யும்.